dinamalar telegram
Advertisement

நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி

Share
சென்னை:'ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழ் கட்சி தனித்து போட்டியிடும். கட்சியினர் போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்பதை உறுதிப்படுத்த, மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்கள் களப்பணியாற்ற வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களை தவிர்த்து, இதர மாவட்டங்களை சேர்ந்த கட்சியினர் அனைவரும், தங்கள் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று, தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும்.

களத்தில் நேரடியாகப் பங்கேற்க முடியாத கட்சியினர், தங்களால் இயன்ற நிதியுதவி அல்லது பொருளதவி வழங்கி, களத்தில் இருக்கும் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்.இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement