dinamalar telegram
Advertisement

இலை விலை குறைவதால் சிக்கல்

Share
ஊட்டி : நீலகிரி குறு, சிறு விவசாய சங்க தலைவர் சுப்ரமணி அறிக்கை:நீலகிரியில், தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.


இதை நம்பி, பல்லாயிக்கணக்கான சிறு விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். 'குறைந்த பட்ச ஆதார விலை, கிலோவுக்கு, 35 ரூபாய் வழங்க வேண்டும்,' என்ற கோரிக்கை குறித்து மத்திய, மாநில அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.தற்போது, வழங்கப்படும் விலையால், விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். தற்போது, படிப்படியாக விலையும் குறைந்து வருகிறது. இந்த பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், சிறு விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவர். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement