dinamalar telegram
Advertisement

கடற்படை கப்பலை பார்த்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்

Share
Tamil News
சென்னை:சென்னை வந்துள்ள இந்திய கடற்படை கப்பல் ராணாவை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பார்வையிட்டனர்.

இந்திய கடற்படையின் ராணா கப்பல், நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்தது. இந்தக் கப்பலை பார்வையிடவும், கப்பலின் செயல்முறைகளை அறிந்து கொள்ளவும், உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு, இந்திய கடற்படை அதிகாரிகள் அழைப்பு விடுத்திருந்தனர். அழைப்பை ஏற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உட்பட 30 நீதிபதிகள், ராணா கப்பலை பார்வையிட்டனர்.


அவர்களுக்கு, இந்திய கடற்படையின் பங்களிப்பு மற்றும் கப்பலின் செயல்பாடுகள் குறித்து, கடற்படை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.அப்போது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை பிளாக் அதிகாரி ரி யர் அட்மிரல் புனீத் சதா உடன் இருந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement