dinamalar telegram
Advertisement

அமைச்சர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாதம் 2 முறை ஆய்வு செய்வேன்

Share
Tamil News
சென்னை :''சட்டசபையில் அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, மாதம் இரண்டு முறை ஆய்வு செய்வேன்,'' என, தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பேசினார்.தி.மு.க., முப்பெரும் விழா, சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது.

மாநில உரிமை



விழாவில், ஈ.வெ.ராமசாமி விருது - மிசா மதிவாணனுக்கும்; அண்ணாதுரை விருது - மூக்கையாவுக்கும்; கருணாநிதி விருது - வேணுவுக்கும்; பாவேந்தர் விருது - வாசுகி ரமணனுக்கும்; அன்பழகன் விருது முபராக்கிற்கும் வழங்கப்பட்டது. விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க.,வில் உழைத்த முன்னோடிகளுக்கு விருது வழங்கும் விழாவை, 1985ல் கருணாநிதி துவக்கினார். ஈ.வெ.ராமசாமி என்றால் சமூக நீதி. அண்ணாதுரை என்றால் மாநில உரிமை. கருணாநிதி என்றால் ஒடுக்கப்பட்டோர் உரிமை.

பாவேந்தர் பாரதிதாசன் என்றால் மொழிப்பற்று. அன்பழகன் என்றால் இனமானம். இதுதான் இந்த கட்சியின் கொள்கை. இதை கடைப்பிடித்து தான் நாம் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில், தி.மு.க., 6வது முறையாக ஆட்சி அமைத்திருக்கிறது. தி.மு.க., ஆட்சி என்பது எந்த பலனும் எதிர்பார்க்காமல் உழைத்த தொண்டர்களால் விளைந்தது.
விடியல் பிறக்கும்

கடந்த நான்கு மாத ஆட்சியில், நாட்டிற்கு நாம் நல்லவர்கள், வல்லவர்கள், கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுபவர்கள், சொன்னதை செய்வர்கள் என்ற நல்ல பெயரை மக்களிடம் வாங்கியுள்ளோம்.மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். இனி ஒவ்வொரு துறைகளிலும் விடியல் பிறக்கும். இன்னும் தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.

சட்டசபையில் அமைச்சர்கள் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, துறை வாரியாக, மாதம் இரண்டு முறை ஆய்வு பணிகளை மேற்கொள்வேன்.ஊரக உள்ளாட்சித் தேர்தலில் எதிர்கட்சியாக இருக்கும் போது, 60, 70 சதவீதம் வெற்றி பெற்றோம்; ஆளுங்கட்சியாக இருப்பதால், நுாற்றுக்கு நுாறு சதவீதம் வெற்றி உறுதி. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • DVRR - Kolkata,இந்தியா

    அதாவது சொன்னபடி கமிஷன் வந்ததா இல்லையா என்பதை மாதம் இரண்டு முறை ஆய்வு செய்வேன் என்று சொல்கிறார் என்று கருத்து கொள்ளவேண்டும்

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    //அமைச்சர்கள் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, துறை வாரியாக, மாதம் இரண்டு முறை ஆய்வு பணிகளை மேற்கொள்வேன்// எனக்களித்த வாக்குறுதிப்படி வசூல் நடைபெறுகிறதா? கப்பம் கட்டப்படுகிறதா? கணக்கு விஞ்ஞான முறையில் பாதுகாக்கப் படுகிறதா? அனைத்தையும் ஆய்வு செய்வேன். சின்ன பகவதியும் உடனிருப்பார்.

  • RajanRajan - kerala,இந்தியா

    இந்த ஆய்வு பண்ணினா அமைச்சன்மாரெல்லாம். வாக்குறுதியை நிறைவேற்ற நாங்க ரெடி உங்க அரசு கஜானா ரெடியானு எதிர் கேள்வி போடுரானுன்களே. எத்தனை முறை தான் மக்களை சுரண்டியே வாக்குறுதிகளை நிறைவேற்றுவீங்க. உங்க சொத்துபத்தை விற்று தான் உங்க வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். இந்த கணக்கு புரியாம என்னமா டுமிலன்ஸ் திராவிட வித்தை காட்டுறாங்கப்பா.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    பொய் மூட்டைகளை அள்ளிவிட்டு வெற்றி பெற்று நகைக்கடன் போன்ற ஓரிரண்டை சரி செய்தால் மட்டும் போதுமா என்று பொது மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    ஆமா, அமைச்சர்கள் என்ன மக்கள் நலனுக்கான திட்டங்களுக்கா வாக்குறுதி அளித்துள்ளார்கள்? துரைமுருகன் ஐயா மணல் மாபியாக்கள் சுற்றுப்புற சூழல் துறை அனுமதி இல்லாமல் மணல் அள்ளி கொள்ளையடிக்க அனுமதி வழங்கியுள்ளாரே, இதுதான் மக்களின் நலத்திட்டமா?

Advertisement