dinamalar telegram
Advertisement

உலகின் செல்வாக்கு மிக்கோர் பட்டியலில் பிரதமர் மோடி, மம்தா

Share
நியூயார்க்:அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'டைம்' இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

டைம் இதழ் ஒவ்வோர் ஆண்டும், உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதற்காக, இதழின் ஆசிரியர்கள் குழு, மிகப்பெரிய பட்டியலை வெளியிடும்.வாசகர்கள் அளிக்கும் ஓட்டுகளின் அடிப்படையில், 100 பேர் பட்டியலை ஆசிரியர் குழு இறுதி செய்யும்.இந்நிலையில், டைம் இதழ் வெளியிட்டுள்ள

2021ம் ஆண்டில் செல்வாக்கு மிக்க 100 தலைவர்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா, 'கோவிஷீல்டு' தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூனாவாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களை தவிர, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரீஸ், சீன அதிபர் ஜிங்பிங், ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். மோடி பற்றி பத்திரிகையாளர் பரீத் ஜகாரியா எழுதியுள்ள கட்டுரையில், 'சுதந்திர இந்தியாவில், நேரு, இந்திராவுக்கு பின், மாபெரும் செல்வாக்கு பெற்ற தலைவராக நரேந்திர மோடி உள்ளார்.

'எனினும், இந்தியாவை மதச்சார்பின்மையிலிருந்து விலக வைத்து, ஹிந்து தேசியம் பக்கம் நெருங்க வைத்துள்ளார். 'இந்திய முஸ்லிம்களின் உரிமைகளை பறித்துள்ளதுடன், பத்திரிகையாளர்கள் பலரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரையில், 'இந்திய அரசியலில் கோபத்தின் முகமாக, மம்தா மாறியுள்ளார்.கட்சியை அவர் தலைமையேற்று நடத்தவில்லை. அவர் தான் கட்சியாக உள்ளார்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement