dinamalar telegram
Advertisement

திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக உறுப்பினர்கள் தேர்வு

Share
திருப்பதி:திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கான தமிழக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.இங்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு- தலைவராக சுப்பாரெட்டி மீண்டும் தேர்வானார்.அடுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தேர்வு பணிகள் தொடங்கி உள்ளன. ஏற்கனவே அறங்காவலர் குழுவில் 24 உறுப்பினர்கள் மற்றும் எட்டு சிறப்பு அழைப்பாளர்கள் இருந்தனர்.

தற்போது தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிராவை சேர்ந்த 25 உறுப்பினர்கள் மற்றும் 25 சிறப்பு அழைப்பாளர்களை நியமிக்க ஆந்திர அரசு முடிவு செய்து உள்ளது. இதன்படி, வேலுார் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., நந்தகுமார், சீனிவாசன், கண்ணையா ஆகியோர், தமிழகத்தில் இருந்து உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement