dinamalar telegram
Advertisement

அரசியல் செய்வதற்கு மட்டுமல்ல; அரசுக்காக திட்டமிடும் இடம் பார்லி.,

Share
புதுடில்லி:''பார்லிமென்ட் என்பது அரசியல் செய்வதற்கான இடம் மட்டும் அல்ல; அரசுக்காக திட்டங்கள் வகுப்பதற்கான இடமும் கூட,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பார்லிமென்ட் நிகழ்வுகளை மக்களுக்கு தெரிவிக்கும் லோக்சபா, 'டிவி' மற்றும் ராஜ்யசபா, 'டிவி' ஆகியவைக், சன்சத் 'டிவி' என்ற பெயரில் ஒரே தொலைக்காட்சியாக இணைக்கப்பட்டுள்ளன.இதன் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:இந்த தொலைக்காட்சி வாயிலாக தான் சாமானிய மனிதருக்கும், பார்லிமென்டுக்கும் நேரடி தொடர்பு ஏற்படுகிறது. பார்லிமென்ட் என்பது அரசியல் செய்யும் இடம் என்பதை கடந்து, திட்டங்கள் வகுக்கப்படும் இடமாக உள்ளது. சர்வதேச ஜனநாயக தினத்தில் துவங்கப்பட்டுள்ள இந்த புதிய தொலைக்காட்சி, நாட்டின் பார்லிமென்ட் நடவடிக்கையில் முக்கிய அத்தியாயத்தை துவக்கி வைக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement