dinamalar telegram
Advertisement

போலீசை சல்யூட் செய்ய வைத்து சர்ச்சையில் சிக்கிய சுரேஷ் கோபி

Share
திருச்சூர்:கேரளாவில், போலீஸ் அதிகாரியை தனக்கு 'சல்யூட்' செய்ய வைத்து, பா.ஜ., - எம்.பி., சுரேஷ் கோபி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்கு பெய்து வரும் கன மழையால், பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள புதுார் கிராமத்தில், பிரபல நடிகரும், பா.ஜ.,வை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,யுமான சுரேஷ் கோபி, வெள்ளம் பாதித்த இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது, அவரை கண்டுகொள்ளாமல் இருந்த போலீஸ் சப் -இன்ஸ்பெக்டரை அழைத்து, தனக்கு சல்யூட் செய்யுமாறு கோரி இருக்கிறார். போலீஸ் அதிகாரியை சல்யூட் செய்ய வைக்கும் காட்சி அடங்கிய 'வீடியோ' சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.போலீஸ் அதிகாரியிடம் அவர், 'நான் ஒரு எம்.பி., எனக்கு சல்யூட் செய்யலாம். அதை செய்ய வேண்டும்.இந்த பழக்கத்தை என்றும் மறந்துவிடக் கூடாது' எனக் கூறுகிறார்.

பின், போலீஸ் அதிகாரியும், அவருக்கு சல்யூட்செய்கிறார். இந்த வீடியோ பதிவு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.சுரேஷ் கோபியின் இந்த செயலுக்கு, கேரள போலீஸ் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement