dinamalar telegram
Advertisement

மூன்றாம் அலை வருமா: மருத்துவ நிபுணர் கணிப்பு!

Share
புதுடில்லி:'புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ் வகைகளால் மட்டும் மூன்றாவது அலை ஏற்படாது' என, மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.

தேசிய நோய் தடுப்பு மையத்தின் இயக்குனர்டாக்டர் சுர்ஜித் சிங் கூறியுள்ளதாவது: மூன்றாவது அலை ஏற்படுமா என்ற அச்சம் உள்ளது. உருமாறியுள்ள கொரோனா வைரஸ் வகைகளால் மட்டும் அது ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதுஆகியவையே அதைஉறுதி செய்யும்.பண்டிகைகள் வருவதால், அடுத்த சில மாதங்கள் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தடுப்பூசி போட்டாலும் முக கவசம் அணிவது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது, பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது போன்றவற்றை உறுதியாக செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால்,அடுத்த ஆறு மாதங்களில் 'எண்டமிக்' எனப்படும் சில பிரிவினரை மட்டும் கொரோனா தாக்கும் நிலையை எட்டிவிடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement