dinamalar telegram
Advertisement

சோனு சூட் இடங்களில் ரெய்டு

Share
Tamil News
மும்பை:மும்பை மற்றும் லக்னோவில், நடிகர் சோனு சூட், 48, தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வசிப்பவர் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்; ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உட்பட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மும்பை உட்பட பல இடங்களில் தவித்த புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப உதவினார். இதன் வாயிலாக தேசிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில், மும்பை மற்றும் லக்னோவில் சோனு சூட் உடன் தொடர்புடைய ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். 'ரியல் எஸ்டேட்' தொழில் ஆவணங்கள் அடிப்படையில் இந்த சோதனை நடந்துள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement