dinamalar telegram
Advertisement

ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல்:ஆணையருக்கு பழனிசாமி கடிதம்

Share
Tamil News
சென்னை : 'உள்ளாட்சி தேர்தலை, ஒரே கட்டமாக நடத்த வேண்டும்' என, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாருக்கு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கடிதம் அனுப்பி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், இரண்டு கட்டங்களாக நடத்தப்படுவது தேவையற்றது.


சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட நிலையில், உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். இரு கட்டமாக நடத்துவது, ஆளுங்கட்சி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட வழிவகுக்கும்.தேர்தல் பார்வையாளர்களாக, தமிழக அரசு ஊழியர்களை நியமிக்காமல், தமிழகத்திற்கு வெளியில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களை நியமிக்க வேண்டும்.அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். தேர்தல் பிரசாரத்தையும், வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை, 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஒன்பது மாவட்டங்களிலும், பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.தேர்தல் பாதுகாப்பு பணியில், துணை ராணுவத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும். திறந்த வெளியில் நடக்கும் பிரசாரத்தில், 100 பேருக்கு மேல் கூட அனுமதிக்கக் கூடாது.உள்ளாட்சி தேர்தல், நேர்மையாக, வெளிப்படையாக நடக்க, அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1 + 14)

 • அப்புசாமி -

  ஆமாம்... மணல் ஊழல் வண்டி வண்டியா வெளியே வருது. சீக்கிரம் ஒண்ணா நடத்திட்டா நல்லது.

Home ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கோரிக்கை (14)

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  அதிமுக அமோக வெற்றி என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்

 • Godyes - Chennai,இந்தியா

  அவர் கட்டம் கட்டமாக உள்ளாட்சி தேர்தலை காவல் துறை உதவியுடன் நடத்தி பட்ட அனுபவத்தில் அதை மத்திய ராணுவத்தை வைத்து ஒரே தடவையாக நடத்த சொல்வது சரிதானே.

 • பேசும் தமிழன் -

  ஒரே கட்டமாக தேர்தல் நடத்தினால்... எப்படி கள்ள ஓட்டு போட முடியும்... எப்படி வெற்றி பெற முடியும்

 • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

  பல கட்டமா நடத்துனாத்தான் டீம்கா வெற்றியை அள்ளிக்குவிக்க வசதியா இருக்கும்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஒரே கட்டமாக அறிந்து வித்திருந்தால்,... இரண்டு கட்டமாக நடத்த வேண்டும் . அப்பதான் கோவிட் பாதிப்பு குறையும். என்று கடிதம் போடுவார். ஹலோ இபிஎஸ்.. உங்களுக்கு எத்தனை தொகுதியை பாஜக தரும் என்று அவர்களுக்கு கடிதம் போட்டாச்சா?

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  ஏன் பழனி நீ தான் கொடநாடு கேசில் அலைய போகிற அப்புறம் என்ன பாவம்

  • Srinivas.... - Chennai,இந்தியா

   கொடநாடு கேசில் உள்ளே போகவேண்டிய கொள்ளைக்காரன்.... கொலைகாரன்...

 • periasamy - Doha,கத்தார்

  எப்படி பார்த்தாலும் அதிமுக என்ற கட்சி ஜெயாவோடு செத்துப்போச்சு

 • RAVIKUMAR - chennai,இந்தியா

  எதனை கட்டமா நடுத்துனாலும் உன் கட்டம் சரியில்லையே ?.. நாம ஆண்ட போது என்னத்த கிழிச்சோம் ?. எவ்ளோ ஆட்டம் போட்டோம் . இப்போ கேக்கறதுக்கு வாய் கூசல?.

 • J. G. Muthuraj - bangalore,இந்தியா

  ஒரே கட்டமா நடத்தினா, கூட்டணியிலிருந்து சில முக்கிய காட்சிகள் தங்களை கழற்றிக்கொண்டிருக்காது....அப்படி நடந்தாலும், ஜெயிப்பது என்பது அதிமுகவிற்கு வழுக்கை மரம் ஏறுதல்தான்.... ..BIG BROTHER ஐ வைத்து சமாளியுங்கள்.....உங்கள் ஆட்சிக்காலத்தில் ஒன்பது மாவட்டங்களை தனிமைப்படுத்தி எடுக்கப்பட்ட தீர்மானம் தானே இது....

 • GMM - KA,இந்தியா

  ஒரே கட்டம் அல்லது பல கட்டம். தமிழக போலீஸ் அல்லது மத்திய போலீஸ். அண்ணா திமுக வெற்றி பெறாது. கூட்டணி சரியில்லை. இரட்டை தலைமை கூடாது.

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  இப்போ தேர்தல் தேவையா?கொரோனா பரவும்

 • palanichamy - Theni,இந்தியா

  அய்யா ஏபிஎஸ் அவர்களை நீங்கள் மட்டும் நான்கு கட்டமா தேர்தல் நடத்துவீங்க. இப்ப மட்டும் என்னவாம் ஒரே கட்டமா நடத்துணுமா

Advertisement