dinamalar telegram
Advertisement

தமிழ் கைதிகளுக்கு கொலை மிரட்டல்: அமைச்சர் ராஜினாமா

Share
கொழும்பு:சிறையில் உள்ள தமிழ் கைதிகளை முட்டி போட வைத்ததுடன், கொலை செய்வதாக மிரட்டிய குற்றச்சாட்டை அடுத்து, இலங்கை சிறை நிர்வாக இணையமைச்சர் லோஹன் ராத்வத்தே, தன் பதவியை ராஜினாமா செய்தார்.

நம் அண்டை நாடான இலங்கையின் சிறை நிர்வாக இணையமைச்சராக இருந்த லோஹன் ராத்வத்தே, சமீபத்தில் வட மத்திய பிராந்தியத்தின் அனுராதாபுரத்தில் உள்ள சிறைக்கு சென்றுள்ளார்.அப்போது அங்கிருந்த இரண்டு தமிழ் கைதிகளை முட்டிப் போட வைத்துள்ளார். மேலும், அவர்களை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார்.இதற்கு, தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பதவியில் இருந்து நீக்கும்படிவலியுறுத்தின.நெருக்கடி அதிகரிக்கவே, தன் பதவியை ராத்வத்தே ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்றுக் கொண்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement