dinamalar telegram
Advertisement

பாக்., - ஓ.ஐ.சி.,க்கு இந்தியா கண்டனம்

Share
புதுடில்லி:ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் பற்றி பேசிய பாகிஸ்தானுக்கும், ஓ.ஐ.சி., எனப்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புக்கும் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தானும், ஓ.ஐ.சி.,யும், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் பற்றி பேசின.இதற்கு கண்டனம் தெரிவித்து, ஐ.நா.,வுக்கான இந்தியாவின் துாதர் பவன் பாதே பேசியதாவது:

பயங்கரவாதத்தை ஆதரித்து, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உட்பட பல்வேறு உதவிகளை செய்து வரும் நாடு பாகிஸ்தான் என்பதை உலக நாடுகள் ஒப்புக் கொண்டு உள்ளன. சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுஉள்ள பலர், பாகிஸ்தானில் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். பயங்கரவாதத்தின் மையமாக உள்ள நாட்டிடம் இருந்து, மனித உரிமைகள் பாதுகாப்பு பற்றி பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம், உலகின் மிகப்பெரிய, வலிமையான ஜனநாயக நாடான இந்தியாவுக்கு இல்லை.

இந்தியாவில் சிறுபான்மையினர் 100 சதவீத பாதுகாப்புடன் உள்ளனர். ஆனால், பாகிஸ்தானில் சிறுபான்மையினர் அச்சத்துடன் வாழ்கின்றனர். ஜம்மு - காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக, பாகிஸ்தான் நீலிக்கண்ணீர் வடிக்கிறது. முதலில் பலுசிஸ்தான் பகுதியில் என்ன நடக்கிறது என, பாக்., பேசட்டும். இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட எந்த உரிமையும் இல்லாத போது, காஷ்மீர் பிரச்னையை பற்றி ஓ.ஐ.சி., பேசியதும் கண்டனத்துக்கு உரியது. இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • canchi ravi - Hyderabad,இந்தியா

    ஓ அய் சி வாயைப் பொத்தினால் நல்லது. காஷ்மீரில் ஹிந்து பண்டிட்களை கொன்று, அச்சுறுத்தி வெளியேற்றியதை வேடிக்கை பார்த்த ஓ அய் சிக்கு நம் உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைப்பது வாடிக்கை ஆகி விட்டது

Advertisement