dinamalar telegram
Advertisement

ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு

Share
Tamil News
புதுடில்லி:ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன், நம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார்.

ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் மாரிஸ் பெய்னும், அந்நாட்டின் ராணுவ அமைச்சர் பீட்டர் டட்டனும் கடந்த வாரம் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்திருந்தனர். அந்த பயணத்தின்போது, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

அந்த, '2 + 2' மாநாட்டில், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. பின், ஆஸ்திரேலிய அமைச்சர்கள், நம் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேசினர். இதற்கிடையே, அடுத்த வாரம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும், 'குவாட்' உச்சி மாநாடு நடக்க உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன், நம் பிரதமர் மோடி, தொலைபேசியில் உரையாடினார்.

தன் 'டுவிட்டர்' பக்கத்தில் மோடி குறிப்பிட்டுள்ளதாவது:என் நண்பரான ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் உரையாடி யதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய - ஆஸ்திரேலிய அமைச்சர்களுக்கு இடையிலான, 2 + 2 மாநாடு குறித்தும், இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் நாங்கள் ஆலோசனை நடத்தினோம். பிராந்திய வளர்ச்சிக்கான வழிகள் குறித்தும், அடுத்த வாரம் நடக்க இருக்கும் குவாட் மாநாடு குறித்தும் கலந்துரையாடினோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement