dinamalar telegram
Advertisement

ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் வரை... பஞ்.,தலைவர் பதவி ஏலம்

Share
வேலூர்: ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்தில், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஏலம் விடுவது தொடங்கியுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு இன்று முதல் வரும், 22 வரை வேட்பு மனு தாக்கல் செய்வது தொடங்குகிறது. வேலூர் மாவட்டத்தில், 247, ராணிப்பேட்டை, 288, திருப்பத்தூர் மாவட்டத்தில், 208 கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடுபவர்களுக்கு, லட்சக்கணக்கில் ரூபாய் செலவாகும். கட்சி சார்பில் போட்டியிட முடியாது என்பதால் பணம், ஜாதி பலம் உள்ளவர்கள் தான் போட்டியிடுவர். இதனால் ஏலம் விடுவது தொடங்கியது. அந்தந்த பஞ்சாயத்தில் கோவில், குளக்கரையில் ஏலம் நடக்கும். அதில் போட்டியிடுபவர்கள் பங்கேற்பர். யார் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கிறார்களோ, அவர்கள் தான் போட்டியிட வேண்டும். ஏலம் எடுத்தவர்கள், அந்த பணத்தை நாட்டாண்மையிடம் கொடுத்து விட வேண்டும். 20 சதவீதம் கமிஷன் போக மற்ற, தொகை போட்டியிலிருந்து விலகி கொள்பவர்களுக்கு பிரித்து வழங்கப்படும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில், 10 லட்சம் முதல், 25 லட்சம் ரூபாய் வரை, 50க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் நேற்று ஏலம் விடப்பட்டுள்ளது. இதை படம் எடுக்க சென்ற பத்திரிகை, 'டிவி', மீடியாக்கள் சில இடங்களில் விரட்டப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் கூறியதாவது: முன்பு வளர்ச்சி திட்டங்களுக்கு, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தான் செக் கொடுத்து வந்தனர். தற்போது பஞ்சாயாத்து தலைவர்களுக்கே, 'செக் பவர்' கொடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால், தேர்தலில் செலவழித்த பணத்தை ஆறு மாதத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் சம்பாதித்து விடுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement