dinamalar telegram
Advertisement

ஹரியானாவில் 10 நாளில் 8 குழந்தைகள் பலி

Share
சண்டிகர்:ஹரியானாவின் ஒரு கிராமத்தில் பரவியுள்ள மர்ம காய்ச்சலுக்கு, 10 நாளில் எட்டு குழந்தைகள் பலியாகி விட்டனர்.

ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. கொரோனா பரவலில் இருந்து மாநிலம் மீண்டு வரும் நிலையில், இங்கு உள்ள பல்வால் மாவட்டத்துக்கு உட்பட்ட சிறிய கிராமமான சில்லியில், மர்ம காய்ச்சல் பரவிஉள்ளது. இந்த காய்ச்சலால், கடந்த 10 நாட்களில் 43 குழந்தைகள் உட்பட 52 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் எட்டு குழந்தைகள் இறந்து விட்டனர். இதையடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகள், கிராமத்தில் முகாமிட்டுஉள்ளனர். அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கிராமத்தில் பரவியுள்ள காய்ச்சல் பற்றி ஆய்வு செய்து வருகிறோம். டெங்கு காய்ச்சலாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. 'கிராமத்தில் கொசு ஒழிப்பு உட்பட சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement