dinamalar telegram
Advertisement

ரூ.10 லட்சம் கோடி கோவில் பணம் சுரண்டல்: ஹெச்.ராஜா பகீர் குற்றச்சாட்டு

Share
ஈரோடு: ''தமிழகத்தில் கோவில் பணம், 10 லட்சம் கோடி ரூபாய் சுரண்டப்பட்டுள்ளது,'' என, பா.ஜ., மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா கூறினார்.


அவதூறு வழக்குகள் தொடர்பாக, ஈரோடு நீதிமன்றத்தில் நேற்று ஆஜராக வந்த அவர் கூறியதாவது: அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு, செயல் பாபுவாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆனால், செயல்படாத பாபுவாக உள்ளார். ஹிந்து கோவில்களை மூட, ஹிந்து மதத்துக்கு விரோதமாக தமிழக அரசு செயல்படுகிறது. கடந்த, 2018 பிப்., மாதம் உயர்நீதிமன்ற மதுரை கிளை அறநிலை தொடர்பாக அளித்த தீர்ப்பை இதுவரை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமாக, 44 ஆயிரம் கோவில்கள் உள்ளன. அமைச்சரோ, 38 ஆயிரத்து, 656 கோவில்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கோவில்களை தன் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின் அறநிலையத்துறை சார்பில் ஒரு கோவிலாவது கட்டப்பட்டுள்ளதா? பல இடங்களில் முன்பு கோவில் இருந்த இடங்களில் தற்போது பிரியாணி கடை உள்ளது. இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில், தமிழகத்தில் தான் நான்கு லட்சத்து, 78 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலம் உள்ளது. இவை அனைத்தும் கோவில் வசம் இல்லை. ஆக்ரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட காலங்களில் கோவில் செயல் அலுவலர்களாக இருந்தவர்கள் மீது, இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அறநிலைய துறைக்கு சொந்தமான, 22,600 வணிக வளாகம், 33,665 காலி மனை இடங்கள் (28 கோடி சதுர அடி) ஆக்கிரமிப்பில் உள்ளன. நீதிமன்ற தீர்ப்பில், 12 வார காலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அறநிலையத்துறை சொத்துகளை மீட்க உத்தரவிடப்பட்டது. ஆனால், இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.


தி.மு.க., பேச்சாளர் மனுஷ்யபுத்திரன், அவரது உறவினர்கள் துவரங்குறிச்சியில், ஹிந்து கோவிலுக்கு சொந்தமான, 30.4 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு இடங்களை பார்க்கப்போன என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஹிந்து விரோத புகார்களை தெரிவிப்பதால், வழக்கு போடுகின்றனர். ஹிந்து அறநிலையத்துறை மூலம் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில், மத கல்வி கட்டாய பாடமாக இருக்க நீதிமன்றம் சுட்டி காட்டியுள்ளது. சட்டசபை மானிய கோரிக்கையின் போது, 12 புதிய கல்லூரிகள் திறக்கப்படும் என அறநிலையத்துறை, உயர் கல்வி துறை அமைச்சர் தனித்தனியே அறிவிக்கின்றனர். இக்கல்லூரிகள் எந்த நிதியில் திறக்கப்படும் என்பதை அமைச்சர்கள் தெளிவுபடுத்த வேண்டும். கோவில் வருமானத்தில், 14 சதவீதம் மட்டுமே அரசு எடுக்க சட்டம் உள்ளது. அதை மீறி முழு வருவாயையும் அரசு எடுக்கிறது. தமிழகத்தில், 10 லட்சம் கோடி ரூபாய் கோவில் பணம் சுரண்டப்பட்டுள்ளது. கோவில்களில் செயல் அலுவலர்கள் எஜமானர்களாக உள்ளனர். ஊழியர்களாகவே இல்லை. 20 ஆண்டாக கோவில்களில் டிரஸ்டி இல்லை. தமிழகத்தில், 4,000 கோவில்கள் மட்டுமே ஆகம விதியின் கீழ் செயல்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement