dinamalar telegram
Advertisement

அரசு பள்ளி மாணவருக்கு தொற்று உறுதி

Share
கிருஷ்ணகிரி: பாரூர், அரசு பள்ளியில், 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும், 15 வயது மாணவருக்கு கடந்த, 8ல் காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதேபள்ளியை சேர்ந்த மேலும் மூன்று மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர் பயின்ற பள்ளி முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களில், மாவட்டம் முழுவதும் இதுவரை ஒரு பள்ளி மாணவர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தொற்று பாதிப்பு காரணங்கள் குறித்து விசாரித்து, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளோம். தொற்று பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement