dinamalar telegram
Advertisement

ஓசூரில் பேனர்களை அகற்றும் மாநகராட்சி

Share
ஓசூர்: ஓசூர் நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தனியார் கட்டடங்கள் மற்றும் சாலையோரங்களில் ராட்சத பேனர்கள் காட்சியளிக்கின்றன. இவை சரிந்து விழுந்தால், மக்கள் உயிரை காவு வாங்கி விடும். உரிய அனுமதியின்றி வைக்கப்படும் இதுபோன்ற பேனர்களை அகற்ற வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்வதாக இல்லை என, கடந்த, 8ல், காலைக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. அதேபோல், தேன்கனிக்கோட்டை, சூளகிரி சுற்று வட்டார பகுதிகளிலும், பேனர் கலாசாரம் தலைதூக்குவதாக செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில், அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை அகற்றுவது குறித்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சியில் அனுமதியின்றி வைத்துள்ள பேனர்களை அகற்றும் பணியை, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பெயரளவிற்கு மட்டும் பணியை மேற்கொண்டு கைவிட்டு விடாமல், அனுமதியல்லாத அனைத்து பேனர்களையும் அகற்றி, மீண்டும் வைக்காத வகையில் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement