dinamalar telegram
Advertisement

விலை வீழ்ச்சியால் பறிக்காமல் செடியில் அழுகும் தக்காளி

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தின்னக்கழனி, மலைசந்து, பெல்லம்பள்ளி, பாலகுறி, மாதேப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் தக்காளி பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக விலை வீழ்ச்சியால் விவசாயிகள், தக்காளியை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டுள்ளனர். இதனால் செடியிலேயே தக்காளி அழுகி வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'ஆண்டுதோறும் தக்காளி விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. ஒரு கிலோ தக்காளி, ஏழு ரூபாய்க்கும் கீழ் சென்றால், எங்களிடம் வியாபாரிகள், மூன்று ரூபாய்க்கு கேட்கின்றனர். அறுவடை கூலி கூட கிடைக்காததால், தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டு கால்நடைகளை வைத்து மேய்த்து வருகிறோம். எனவே, தக்காளியை மதிப்பு கூட்டு பொருளாக தயாரிக்கவும், அரசே விலை நிர்ணயம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement