dinamalar telegram
Advertisement

ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் பெட்ரோல், டீசல்? குறைகிறது விலை? கவுன்சில் கூட்டத்தில் நாளை விவாதம்

Share
Tamil News
புதுடில்லி : உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், நாளை நடைபெற உள்ள ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அந்த பரிந்துரை ஏற்கப்பட்டால், பெட்ரோல் லிட்டர் 75 ரூபாய்க்கும், டீசல் 68 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் வரை அதிகரிக்காமல் இருந்த பெட்ரோல் விலை, அதன்பின் படிப்படியாக உயர்ந்து, லிட்டருக்கு 100 ரூபாயைக் கடந்தது. புதுடில்லியில் ௧ லிட்டர் பெட்ரோல் 101.19 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 88.62 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், பெட்ரோல் விலையில் மத்திய அரசு வரிகள் 32 சதவீதமாகவும், மாநில அரசு வரிகள் 23.07 சதவீதமாகவும் உள்ளன.டீசல் விலையில் மத்திய அரசின் வரிகள் 35 சதவீதமாகவும், மாநில வரிகள் 14 சதவீதமாகவும் உள்ளன.

நிதி நெருக்கடிகடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலின் போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக சரிந்தது. அந்த நேரத்தில் உலகம் முழுதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்ததை அடுத்து, பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்தது. இது சர்வதேச அளவில் அரசுகளுக்கு வரி வருவாயில் கடும் இழப்பை ஏற்படுத்தியது.எனவே, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, மத்திய - மாநில அரசுகள் கலால் வரியை உயர்த்தின.

ஊரடங்கால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்கவே, கலால் வரி உயர்த்தப்படுவதாக தெரிவித்தன.பெட்ரோலியத் துறையில் 2020 - 21ம் ஆண்டில், மத்திய வரிகள் வாயிலாக 3.72 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. மாநில அரசு விதித்த மதிப்பு கூட்டு வரி வாயிலாக 2.03 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.'தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டுமானால் அதை ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வரம்பிற்குள் எடுத்து வர வேண்டும்' என, பல்வேறு தரப்பினரும் நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

பரிந்துரைஇது தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்குமாறு, மத்திய அரசுக்கு கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.இந்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் உ.பி., தலைநகர் லக்னோவில் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'இந்த பரிந்துரை ஏற்கப்பட்டு, பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் வந்தால் அதன் விலை கணிசமாக குறையும். 1 லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கும், டீசல் 68 ரூபாய்க்கும் விற்பனை செய்யும் நிலை ஏற்படக் கூடும்' என, டில்லி ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

'ஸ்விக்கி, ஸொமேட்டோ'வுக்கு ஜி.எஸ்.டி., அமல்?ஓட்டல்களிலிருந்து வீடுகளுக்கு உணவு 'சப்ளை' செய்யும், 'ஸ்விக்கி, ஸொமேட்டோ' போன்ற உணவு சேவை நிறுவனங்களை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து, கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி கொண்டு வந்தால், 'ஆன்லைன்' வாயிலாக நாம் வாங்கும் உணவுகளுக்கான ஜி.எஸ்.டி.,யை உணவகங்களிடம் இருந்து பெற்று, அதை உணவு சப்ளை செய்யும் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்தும். இதனால், தற்போதுள்ள விலை உயர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

மேலும், வீட்டில் சமையல் மட்டும் செய்து அதை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யும், 'கிளவுட் கிச்சன்' தொழில் செய்வோரும், உணவக சேவை வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டு, அவர்களுக்கு ஐந்து சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (21)

 • M Ramachandran - Chennai,இந்தியா

  எதிர்பார்த்த முடிவு தான். எல்லாமே கூட்டு களவாணி திருடர்கள் என்று நிரூபணமாயிற்று.

 • M Ramachandran - Chennai,இந்தியா

  கடைசில நான் எழுதியதப்போரால் தான் முடிவு வந்தது. மமதை மம்தா விடியல் எல்லாம் ஊம்ஹூ என்று முடிவுரை எழுதி விட்டார்கள். எல்லாம் ஜுஜுபி. மக்களை நன்றாக மடயர்களாக்கி நாடகம் ஆடும் கும்பல்.

 • Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ

  நல்ல முடிவு. தமிழ்நாட்ல பெட்ரோல் மூலம் சில பைசாக்கள்தான் வருமானம்னு சொல்லும் பி டி ஆர் இதை வரவேற்பாரா இல்லை உண்மையான வருமானத்தை சொல்லி மறுப்பாரா?

 • M Ramachandran - Chennai,இந்தியா

  முன்தயா மன்மோகன் சிங் பா சி அரசு வைத்து விட்டு போன பெட்ரோல் கடன் முடிவுக்கு வந்து விட்டதா?. மமதா விடியல் அரசுகளுக்கும் வருமானம் இழப்படு ஏற்படுமே. அதற்க்கு ஒப்புதல் அளிக்குமா?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் டீசல் சமையல் வாயு மற்றும் இதர.பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டு வந்தால்.. முழு 28% ஜிஎஸ்டி யை ஒன்றிய அரசு வசூலித்து கொண்டு, அதில் மாநில அரசின் பங்கை கொஞ்சம் கொஞ்சமாக நாளைக்கு தரேன்.. அடுத்த வருடம் தரேன் என்று இழுத்தடிக்கும். இப்போதே ஒன்றிய அரசு ஒவ்வொரு மாநிவத்துக்கும் வணிகர்களுக்கும் திரும்பி தர வேண்டிய ஜிஎஸ்டி இன்புட் ரீஃபண்ட் தர வேண்டிய தொகை பல கோடிகள். இல்லை என்று சொல்ல முடியுமா?

  • NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா

   ஆட தெரியாத தெருக்கோணல் என்று சொல்வாளாம் அப்படி இருக்கு கொங்கு நாட்டில் பாதி ,கேரளா நாட்டில் பாதி என்று வாழ்வோரின் எழுத்துக்கள்

Advertisement