dinamalar telegram
Advertisement

ஊட்டச்சத்து விழிப்புணர்வு

Share
ஓசூர்: தர்மபுரி, மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் சூளகிரி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், ஊட்டச்சத்து வாரம், விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவம் மற்றும் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சூளகிரி பழைய பி.டி.ஓ., அலுவலக அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், நடமாடும் பிரசார வாகன ஊர்தி மற்றும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மக்கள் தொடர்பு கள அலுவலக விளம்பர அலுவலர் பிபின் எஸ்நாத், பி.டி.ஓ.,க்கள் சிவக்குமார், சுப்பிரமணியம், வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா உட்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement