dinamalar telegram
Advertisement

பயங்கரவாதிக்கு உதவி டிராவல் ஏஜென்டிடம் கிடுக்கி

Share
மும்பை:டில்லி சிறப்பு போலீஸ் பிரிவினரால் கைது செய்யப் பட்டுள்ள, ஆறு பயங்கரவாதிகளில் ஒருவரான, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த முகமது ஷேக்கின் குடும்பத்தார் மற்றும் அவருக்கு உதவிய, 'டிராவல் ஏஜென்ட்' இடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டில்லி, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஆறு பயங்கரவாதிகளை, டில்லி சிறப்பு போலீஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர். பண்டிகை காலத்தின்போது, நாட்டின் பல இடங்களில் தாக்குதல்கள் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

நம் அண்டை நாடான பாக்.,கில் உள்ள நிழலுலகதாதா தாவூத் இப்ராஹிம் இவர்களுக்கு பண உதவி செய்துள்ளார். மேலும், இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு, பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., பயிற்சி அளித்துள்ளதும் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவரான முகமது ஷேக், 47, மும்பையைச் சேர்ந்தவர். அதையடுத்து, மும்பையின் சியானில் உள்ள குடிசைப் பகுதியில் வசித்து வரும் அவருடைய குடும்பத்தாரிடம், மும்பை போலீசாரும், மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படையினரும் விசாரித்து வருகின்றனர்.

மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அவர் நீண்ட காலமாக அங்கு வசித்து வருகிறார். மும்பையில் இருந்து டில்லிக்கு ரயிலில் செல்லும்போது, ராஜஸ்தானின் கோட்டாவில் முகமது ஷேக் கைது செய்யப்பட்டார். அவருக்கு ரயில் டிக்கெட் ஏற்பாடு செய்த, டிராவல் ஏஜென்ட்டை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement