dinamalar telegram
Advertisement

பயணிகள் நிழற்கூடம் தரைமட்டம்

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலை, கங்கலேரி பஞ்.,க்கு உட்பட்ட வடுகம்பட்டி கூட்ரோடு, பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு கடந்த, 2015ல், 19 ஆயிரத்து, 500 ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடம் தற்போது இடித்து தரைமட்டமாகி கிடக்கிறது. கடந்த ஒன்றரை வருடங்களாக இதை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதனிடையே பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்ட இடம் பெத்ததாளாப்பள்ளி, கங்கலேரி, இவற்றில் எந்த பஞ்.,ல் உள்ளது என்பதிலும் குழப்பம் உள்ளதாகவும், பட்டா நிலத்தில் பஸ் நிறுத்தம் கட்டப்பட்டதாகவும் கூறுகின்றனர். அதற்கு மாற்றிடத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க பெத்ததாளாப்பள்ளி, கங்கலேரி பஞ்., தலைவர்கள் மனு அளித்துள்ளனர். அங்கு பயணிகள் பஸ் ஏற வசதியாக அந்த இடத்திலோ, அல்லது புதிய இடத்திலோ பயணிகள் நிழற்கூடம் கட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement