dinamalar telegram
Advertisement

பைக்குகள் மோதி தாய் பலி: மகன் உட்பட இருவர் காயம்

Share
ஓசூர்: பேரிகை அருகே, பைக்குகள் மோதிய விபத்தில் தாய் பலியானார். அவரது மகன், உறவுப்பெண் படுகாயமடைந்தனர். கர்நாடகா மாநிலம், மாலூர் அடுத்த பி.என்.தொட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரப்பா மனைவி குணவதி, 56; இவர் கடந்த, 12ல் மாலை மகன் பரத்நாயக், 31, மற்றும் உறவினரான கொல்லப்பள்ளியை சேர்ந்த தனலட்சுமி, 25, ஆகியோருடன், டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில் சென்றார். பரத்நாயக் பைக்கை ஓட்டினார். பேரிகை அடுத்த வானமங்கலம் - பி.எஸ்., திம்மசந்திரம் சாலையில் சென்றபோது, அவ்வழியாக வந்த பஜாஜ் பல்சர் பைக்கும், அப்பாச்சி பைக்கும் மோதின. இதில் குணவதி, அவரது மகன் பரத் நாயக், உறவினர் தனலட்சுமி ஆகிய மூவரும் காயமடைந்தனர். அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு குணவதி உயிரிழந்தார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement