dinamalar telegram
Advertisement

அந்த நிகழ்வை மறக்க முடியாது!

Share
Tamil News
பார்த்த இடம், ரசித்த உணவு மற்றும் பிடித்த பொருட்களை 'யுடியூப்' பக்கத்தில் 'ஷேர்' செய்து 10 லட்சம் இதயங்களைக் கவர்ந்திருக்கும் டேனியல் ஜெயின் ராஜ்: வெளியூரில் இருப்போருக்கு மாமல்லபுரம் புதிது என்பதால், அவர்களுக்கு நான் பார்த்து ரசித்த இடங்களை சுற்றிக்காட்ட 'வீடியோ' எடுத்தேன். அதன்பின், வளர்ப்பு பிராணிகள் சமையல் செய்து வீடியோ போட்டேன்.

அவை எதுவுமே பெரிய அளவில் 'ரீச்' ஆகவில்லை. 'அக்வேரியம்' போய் மீன்கள் வாங்கி வருவதை வீடியோ எடுத்துப் போட்டேன். அது நிறைய பேருக்கு பிடித்து, அடுத்து நான் போட்ட எல்லா வீடியோக்களும்'ஹிட்' அடிக்க ஆரம்பித்தன.சப் - -இன்ஸ்பெக்டராக உள்ளார் அப்பா. 'யுடியூப் சேனல்' ஆரம்பித்துள்ளதாக அப்பாவிடம் கூறிய போது, தயக்கம் இருந்தாலும் கொஞ்சமும் வெளிப்படுத்தாமல் ஆதரவு தந்தார். 2016ல் சேனலை துவங்கினேன். ஆரம்பத்தில் என் தம்பி தான் 'கேமராமேன் மற்றும் எடிட்டராக' இருந்தான். என்னுடைய சேனலுக்கு வரும் 'கமென்ட்' எல்லாத்தையும் அம்மா படிப்பாங்க. நான் 'நெகட்டிவ்' கமென்ட்சை பெரிதாக எடுத்துக்க மாட்டேன். ஆனா, அம்மா ரொம்ப வருத்தப்படுவாங்க.ஐ.டி., வேலையும் பார்த்து, சேனலையும் கவனித்து கொள்கிறேன்.


ஐ.டி., வேலையை விட வேண்டாம் என பெற்றோர் கூறுகின்றனர். ஆனால், விரைவிலேயே வேலையை விட்டுட்டு முழு நேர 'யுடியூபர்' ஆக மாறி உள்ளேன்.மஹாராஷ்டிர மாநிலம், புனேவில் படம் எடுத்துக் கொண்டிருந்தேன். பயங்கரவாதின்னு சொல்லி என்னை ஸ்டேஷனுக்கு அழைத்து போனார் போலீஸ் அதிகாரி. தகாத வார்த்தைகளில் எல்லாம் திட்டினார். நான் பொறுமையாக இருந்தேன். கடைசியில் என் மேல் எந்தத் தப்பும் இல்லை என்பதை புரிந்து, அவரே டீ வாங்கிக் கொடுத்து நமஸ்தே சொல்லி வழியனுப்பி வைத்தார். அந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது.

அதே மாதிரி, தாராவி யில் நான் பார்த்த நிறைய விஷயங்கள் மனதுக்கு மிகவும் வருத்தமாக இருந்தன. நம் படுக்கையறையை விட சின்ன இடம் தான் அவர்களுடைய மொத்த வீடே. அந்த வீட்டில் வடை சுட்டு விற்கும் அம்மாவின் கணவர், வேலைக்கு போயிருந்தார். அவர்களுடைய குழந்தைகள் வாசலில் படுத்திருந்தனர்.அந்த வீட்டுக்குள் போய் நான் வீடியோ எடுத்துட்டு இருந்தேன். அங்கே என்னால் நிற்க கூட முடியவில்லை. புகை போகக்கூட வழியில்லாமல் அந்த வீடு முழுதும் அனல் பரவி இருந்தது. நாம் எவ்வளவு வசதியாக வாழ்ந்து வருகிறோம். இப்படியும் மனிதர்கள் வாழ்வதை பார்த்து மிகவும் வருத்தமாக இருந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement