dinamalar telegram
Advertisement

தடுப்பு சுவரில் பைக் மோதி கண்டக்டர் பலி

Share
தர்மபுரி: தர்மபுரி அடுத்த பெரிய குரும்பட்டியை சேர்ந்தவர் விஜி, 20. இவர், தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு தர்மபுரியில் இருந்து, பழைய தர்மபுரிக்கு பல்சர் பைக்கில் சென்றார். ராமக்காள் ஏரி அருகே, அவரது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement