dinamalar telegram
Advertisement

கட்டட மேஸ்திரி சாவு

Share
அதியமான்கோட்டை: அதியமான்கோட்டை அடுத்த ஊத்துப்பள்ளத்தை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி முருகன், 40. இவரது மனைவி செல்வி, 34. முருகன் குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த, 6ல் ஏற்பட்ட தகராறில் முருகன் வீட்டுக்கு வரவில்லை. இருசன்கொட்டாயிலுள்ள ஒரு விவசாய நிலத்தில் தலையில் காயத்துடன் மயங்கி கிடந்த அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement