dinamalar telegram
Advertisement

பைக் மோதி முதியவர் பலி

Share
கம்பைநல்லூர்: சென்னை பழைய பல்லாவரம் சுபம் நகரை சேர்ந்தவர் விட்டல்ராவ், 70. இவர், செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு, தர்மபுரி மாவட்டம், கே.ஈச்சம்பாடியிலுள்ள தன்னுடன் பணியாற்றிய நண்பர்களை பார்க்க டொயோட்டா எடிட்ஸ் காரில் கம்பைநல்லூர் வந்தார். அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் காரை நிறுத்திவிட்டு, சாலையின் எதிர்புறமிருந்த நண்பரிடம் பேசி விட்டு, காரை நோக்கி வந்தார். அப்போது, மொரப்பூர் நோக்கிச்சென்ற அடையாளம் தெரியாத டூவீலர் அவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இது குறித்து அவரது மகள் நந்தினி, 33, புகார்படி, கம்பைநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement