dinamalar telegram
Advertisement

சீட்டு பணம் கேட்டதால் மேஸ்திரி மீது தாக்குதல்

Share
பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அருகே வேலம்பட்டியை சேர்ந்தவர் சுந்தரம், 40. பகுதிநேர ஆசிரியராக பணியாற்றி வரும் ?இவர், ஏலச்சீட்டும் நடத்தி வருகிறார். பாப்பாரப்பட்டி அப்பு முதலிதெருவை சேர்ந்த கட்டட மேஸ்திரி தனசேகரன், 34, அவரிடம் சீட்டு பணம் கட்டி வந்துள்ளார். கடந்த, 10ல், ஏலச்சீட்டு நடத்தும் அலுவலகத்துக்கு சீட்டு எடுக்க சென்றுள்ளார். இரண்டு நாட்களாக அலுவலகம் பூட்டியே இருந்ததால், தனசேகரன் அவரது மனைவி தேவி மற்றும் சகோதரி கவிதாவுடன், வேலம்பட்டியிலுள்ள சுந்தரத்திடம் சென்று, சீட்டு பணம் கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, சுந்தரம் தாக்கியதில் தனசேகரனின் மண்டை உடைந்தது. அவரது புகார்படி, பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement