dinamalar telegram
Advertisement

அசைவ உணவகத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

Share
காரிமங்கலம்: காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையிலான குழுவினர், காரிமங்கலம், மாட்லாம்பட்டி பெரியாம்பட்டி, பைசுஅள்ளி, அகரம் பைபாஸ் ரோடுகளிலுள்ள அசைவ உணவகங்களில் ஆய்வு செய்தனர். இரண்டு உணவகங்களில் தயாரிப்பு தேதி, உரிய முகவரி இல்லாத நெய் கன்டெய்னர், 400 கிராம் மற்றும் தயாரிப்பு முகவரி இல்லாத உணவு பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் ஓர் உணவகத்தில் தயாரிப்பு தேதி இல்லாத குடிநீர் கேனை பறிமுதல் செய்து கீழே கொட்டினார். உணவு மற்றும் உணவு பொருள் பற்றிய புகார்களுக்கு மாநில, 'வாட்ஸ் ஆப்' புகார் எண் 94440 42322 என்ற எண்ணிற்கு, 'கட் செவி அஞ்சல்' அனுப்பலாம் என தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement