dinamalar telegram
Advertisement

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்: அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

Share
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட திட்ட இயக்குனர் வைத்தியநாதன் தலைமையில் நேற்று பயிற்சி வகுப்பு நடந்தது. இதில், அவர் பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள, 18வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவியிடம், பாலக்கோடு யூனியனுக்கு உட்பட்ட குட்லானஹள்ளி பஞ்., தலைவருக்கான பதவியிடம், சில்லாரஹள்ளி பஞ்., 2 வார்டு, சிட்லிங் பஞ்., 1வது வார்டு, ஆர்.கோபிநாதம்பட்டி பஞ்., 6வது வார்டு, மெணசி பஞ்., 8வது வார்டு, பெரியப்பட்டி பஞ்., 8வது வார்டு, கோட்டப்பட்டி பஞ்., 4வது வார்டு, மனியாண்டஹள்ளி பஞ்., 7வது வார்டு, எச்சனஹள்ளி பஞ்., 2வது வார்டு, பங்குநத்தம் பஞ்., 5வது வார்டு, மருதிப்பட்டி பஞ்., 2வது வார்டு, மூக்காரெட்டிப்பட்டி பஞ்., 3வது வார்டு மொரப்பூர் பஞ்., 7வது வார்டு உள்ளிட்ட, 12 காலி பதவியிடம் என, மாவட்டத்திலுள்ள, 14 காலி பதவியிடங்களுக்கு அக்., 9ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கி வரும், 22 வரை நடக்கிறது. மனுக்கள் மீதான ஆய்வு, 23ல் நடக்கிறது. இறுதி வேட்பாளர் பட்டியல், 25ல் அறிவிக்கப்படுகிறது. அக்., 9ல் தேர்தல் நடக்கிறது. தேர்தலை திறம்பட நடத்தி முடிக்க, அனைத்து அலுவலர்களும் சிறந்த முறையில் செயல்பட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இதில், மகளிர் திட்ட இயக்குனர் பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) மாரிமுத்துராஜ், உதவி இயக்குனர் (தணிக்கை) முரளிகண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement