dinamalar telegram
Advertisement

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Share
தர்மபுரி: தர்மபுரி, டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், பி.எஸ்.என்.எல்., எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். இதில், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது. பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு, ஊதிய மாற்றம், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள, 11 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். நேரடி நியமன ஊழியர்களுக்கு, 30 சதவீத ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட நிர்வாகிகள் முருகன், கிருஷ்ணன், குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement