dinamalar telegram
Advertisement

மு, சி.1.2 வகை வைரஸ்கள் இந்தியாவில் பரவவில்லை

Share
Tamil News
புதுடில்லி: 'மு, சி.1.2 போன்ற மரபணு மாறி உருவான புதிய வகை கொரோனா வைரஸ்களால், இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை' என, 'இன்சாகாக்' அமைப்பு தெரிவித்துள்ளது.

நம் நாட்டில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே, ஆப்ரிக்க நாடான தென் ஆப்ரிக்காவில், புதிதாக மரபணு மாறிய, சி.1.2 வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது, இந்தியாவில் பரவ வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில்உள்ள இன்சாகாக் எனப்படும், மரபணுவை வரிசைப்படுத்தும் கூட்டமைப்பு, இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த மாதம் மரபணு மாறி, பி.1.621 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

அதற்கு, 'மு' என பெயரிடப்பட்டுள்ளது. இதேபோல், சி.1.2 என்ற மரபணு மாறிய வைரசும் அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்தது.தென் ஆப்ரிக்காவில், சி.1 ரக வைரசில் இருந்து, மரபணு மாறி உருவான இந்த சி.1.2 ரக வைரஸ், இந்தியா உட்பட எந்த நாடுகளுக்கும் பரவவில்லை. இதேபோல், மு வைரசாலும் இந்தியாவில் யாரும் இதுவரை பாதிக்கப்படவில்லை.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணியர், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களின் மரபணு மாதிரிகளை வரிசைப்படுத்தி பரிசோதிக்க வேண்டியது அவசியமாகும். இந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினால், புதிய மரபணு மாறிய கொரோனா வைரஸ்கள் இந்தியாவில் பரவுவதை தடுக்கலாம். இந்தியாவில் டெல்டா மற்றும் டெல்டாவில் இருந்து மரபணு மாறி உருவான இதர வகை வைரஸ்களால் தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    இதை ஊடகங்கள் வழியாக உரக்க சொல்லாதீர்கள். சீனாக்காரன் உடனே அதற்குரிய வேலயை தொடங்கி விடுவான்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    சீன வைரஸ் உலகை பல ஆண்டுகள் கொடுமைப்படுத்தி விட்டது. இந்த ஆண்டாவது சரியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் குறைந்தபட்சம் அதன் தாக்கம் அடுத்த ஆண்டாவது குறையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Advertisement