dinamalar telegram
Advertisement

ஹிந்து சமய அறநிலைய துறை இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Share
தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு சொந்தமான தர்மபுரி தபால் நிலையம் அருகே உள்ள இடத்தில், குமாரசாமிபேட்டையை சேர்ந்த தங்கமணி என்பவர் கடந்த, 50 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து லேத் நடத்தி வந்தார். அந்த இடத்தை காலி செய்ய, தர்மபுரி ஹிந்து சமய அறநிலையத்துறையினர் தங்கமணிக்கு நோட்டீஸ் அனுப்பினர். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது லேத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். நீதிமன்ற உத்தரவையடுத்து அப்பணியை நிறுத்தினர். நேற்று மீண்டும் தங்கமணியின் லேத்தில் உள்ள பொருட்களை பொக்லைன் மூலம் அகற்றும் பணி நடந்தது. தங்கமணி தரப்பினர் கூறுகையில், 'கடந்த, 1984 முதல் அறநிலையத்துறைக்கு முறையாக வாடகை செலுத்தி லேத் நடத்துகிறோம். திடீரென அதிகாரிகள் காலி செய்ய அறிவுறுத்தினர். இதுகுறித்த வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், அறநிலையத்துறை நிர்வாகம் எங்களது பொருட்களை அகற்றுகிறது' என்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தங்கமணி, இடத்துக்கான வாடகை செலுத்தாததால், அவரது லேத்தை காலியும் செய்ய ஏற்கனவே உத்தரவிட்டோம். அவர் காலி செய்யாததால், தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம்' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement