dinamalar telegram
Advertisement

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

Share
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டு பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டசபை தொகுதிகளில், தர்மபுரியில், 306, பென்னாகரம், 292, பாலக்கோடு, 267, பாப்பிரெட்டிப்பட்டி, 314, அரூர்(தனி) 299 என, மொத்தம், 1,478 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடிகளின் பெயர், இடமாற்றம், ஒரு வாக்குச்சாவடியில், 1,500 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால், அதை பிரித்தல், வாக்காளர்களின் இருப்பிடத்தில் இருந்து, 2 கி.மீ., மேல் இருந்தால் அந்த வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்குகள் போன்ற விபரங்கள் இருந்தால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் வரும், 20 முதல், 25 வரை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலகத்தில் எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார். சப்-கலெக்டர் சித்ரா, அரூர் ஆர்.டி.ஓ., முத்தையன் மற்றும் வருவாய்த்துறையினர், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement