dinamalar telegram
Advertisement

குற்றவாளிக்கு என்கவுன்டர் அமைச்சர் கருத்தால் சர்ச்சை

Share
ஐதராபாத்:''சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர், 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்படுவார்,'' என, தெலுங்கானா அமைச்சர் மல்லா ரெட்டி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. தலைநகர் ஐதராபாதில் கடந்த 9ம் தேதி, 6 வயது சிறுமி ஒருவர் திடீரென மாயமானார். பின், உறவினர் வீட்டில் அந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த சிறுமியை, அவரது உறவினரான பள்ளகொண்ட ராஜு, 30, என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

தப்பிச்சென்ற ராஜுவை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.இதற்கிடையே, அவர் கைது செய்யப்பட்டதாக தவறான தகவல்கள் வெளியாகின. இதை, மாநில அமைச்சரும், முதல்வர் சந்திரசேகர ராவின் மகனுமான ராமா ராவ், தன் 'டுவிட்டர்' பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். தவறான தகவல் வெளியானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களும், அப்பகுதி மக்களும் போராட்டத்தில் குதித்தனர்.

இந்நிலையில், ராமா ராவ் தற்போது வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக எனக்கு தவறான தகவல் கிடைத்தது. எனவே, இதற்கு முன் வெளியிட்ட டுவீட்டை நான் திரும்பப் பெறுகிறேன். குற்றவாளியை தேடும் பணிகளில் ஐதராபாத் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மல்லா ரெட்டி கூறுகையில், ''சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற அந்த நபர், என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப் படுவார்,'' என்றார். அமைச்சரின் இந்த பேச்சு, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    பொறுப்பற்ற செய்திகள் ஒரு அமைச்சர்,மகன்,மூலமே வருகிறது அவருக்கு என்ன அக்கறை, அவசரம்? எந்கவுண்டர் செய்வதானால், பல அமைச்சர், அரசியல்வாதிகள் வீட்டு வாரிசுகள்தான் முதல் லிஸ்டில் வருவார்கள்

Advertisement