dinamalar telegram
Advertisement

ஊராட்சி தலைவர், அரசு ஊழியர் இடையே தகராறு

Share
கெங்கவல்லி: ஊராட்சி தலைவர் மற்றும் அரசு ஊழியர் இடையே தகராறு ஏற்பட்டது. கெங்கவல்லி அருகே, வலசக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையா, 51. இவர், கெங்கவல்லி அரசு பள்ளி விடுதியில் காவலாளியாக பணிபுரிகிறார். இவர் அரசு தொகுப்பு வீடு கட்டுவதற்கு மனு செய்துள்ளார். இவர், அரசு பணியில் உள்ளதால் தொகுப்பு வீடு கட்டுவதற்கான மனுவை, கெங்கவல்லி ஊரக வளர்ச்சி அலுவலர்கள் தள்ளுபடி செய்தனர். அதன்பின், சொந்தமாக வீடு கட்டிய நிலையில், பொது குடிநீர் குழாயில் தனியாக வீட்டிற்கு குழாய் அமைத்துள்ளார். அதையறிந்த, 74.கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவர் பெருமாள், ஊராட்சி செயலர் சோலைமுத்து ஆகியோர் இது குறித்து கேட்டுள்ளனர். பின், குழாயை அகற்றும் பணியின்போது, இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ஊராட்சி தலைவர் பெருமாள், அரசு ஊழியர் கண்ணையா ஆகியோர், கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement