dinamalar telegram
Advertisement

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

Share
தலைவாசல்: தலைவாசல், மணிவிழுந்தான் ஊராட்சி, ராமானுஜபுரத்தை சேர்ந்தவர் விமலா, 60. இவருக்கு சொந்தமான இரு ஏக்கர் நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த கலைமணி குத்தகை செலுத்தி பயிர் செய்து வருகிறார். இவரது காட்டிற்கு அருகில் விஜயன் என்பவரது காடு உள்ளது. இரு தரப்பிற்கும் இடையே வரப்பு தகராறு இருந்து வந்துள்ளது. விமலா காடு குத்தகை விவகாரத்திற்கு, அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன், 63, என்பவர் சாட்சியாக இருந்துள்ளார். வரப்பு தகராறில் பேச்சுவார்த்தை நடத்தி தருமாறு, விமலாவின் உறவினர் வெங்கடாசலம், 50, நேற்று முன்தினம் லட்சுமணனிடம் தகராறு செய்துள்ளார். அதற்கு அவர் உடன்பட மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடாசலம், அவரது சமூகத்தின் பெயரை சொல்லி திட்டி, தலையில் வெட்டியுள்ளார். காயமடைந்த லட்சுமணன் ஆத்தூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவர் நேற்று அளித்த புகார்படி, வெங்கடாசலம் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து, தலைவாசல் போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement