dinamalar telegram
Advertisement

விபத்தில் கண்காணிப்பாளர் பலி

Share
சேலம்: சேலம், அம்மாபேட்டையில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், தனியார் ஸ்பின்னிங் மில் கண்காணிப்பாளர் பலியானார். சேலம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் நாகராஜ், 45. இவர், அதே பகுதியில் உள்ள உள்ள ஸ்பின்னிங் மில்லில் கண்காணிப்பாளராக பணியாற்றினார். இவரின் உறவினர் சபரிநாதன், 32, என்பவருடன் கடந்த, 12ல் பைக்கில் உடையாபட்டியில் இருந்து, சென்னை தேசிய நெடுஞ்சாலை சந்திப்புக்கு சென்ற நிலையில், எதிரே வந்த பைக் மோதியது. இதில் காயமடைந்த நாகராஜ், சபரிநாதன் ஆகியோரை அப்பகுதி மக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நாகராஜ் இறந்தார். அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement