dinamalar telegram
Advertisement

ரயிலில் பெண்களிடம் 15 பவுன் கொள்ளை

Share
சேலம்: நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில், மூன்று பெண்களிடம், 15 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக, சேலம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரளா மாநிலம் திருவல்லாவை சேர்ந்தவர் விஜயலட்சுமி, 55. இவர் மகள் அஞ்சலி, 19. இவர்கள் டில்லியில் இருந்து, உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ள நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த, 12 இரவு கேரளாவுக்கு வந்தனர். அதே ரயிலில் கோவையை சேர்ந்த கவுசல்யா, 29, என்பவரும் பயணித்தார். கடந்த, 13 காலை, 7:10 மணிக்கு ரயில் திருவனந்தபுரம் வந்த நிலையில், பெட்டியிலேயே மூன்று பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை ரயில்வே போலீசார் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். மயக்கம் தெளிந்த நிலையில், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், மூன்று பேரும் சேலத்தில் இரவு உணவு வாங்கி உள்ளனர். பெட்டியில் வைத்து விட்டு கழிப்பறைக்கு சென்று திரும்பிய நிலையில், உணவை சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் மயங்கி விட்டதாகவும், அப்போது விஜயலட்சுமி, அஞ்சலியிடம் இருந்து, 15 பவுன் நகை, கவுசல்யாவிடமிருந்து மொபைல் போனும் கொள்ளை அடிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். திருவனந்தபுரம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் விசாரணையில், உணவில் மயக்க மருந்து கொடுத்து, கொள்ளையை அரங்கேற்றியது உத்தரபிரதேசத்தை சேர்ந்த அக்?ஷர் பக்?ஷ, 35, என தெரிய வந்தது. இதனால் அவர் சேலம், ஈரோட்டில் முகாமிட்டு இருக்கலாம் என திருவனந்தபுரம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், சேலம் ரயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் அளித்தனர். அதன்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement