dinamalar telegram
Advertisement

விவசாயி பலி

Share
சங்ககிரி: தேவூர், குள்ளம்பட்டி அருகே பழக்காரன்காட்டை சேர்ந்த விவசாயி பச்சமுத்து, 50. இவர், இரு சக்கர வாகனத்தில் சரபங்காநதி பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மைலம்பட்டியை சேர்ந்த இளவரசன் மைலம்பட்டியிலிருந்து இடைப்பாடி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இரு வாகனங்களும், பழக்காரன்காடு பகுதியில் மோதிக்கொண்டதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் பச்சமுத்து இறந்தார். இளவரசன் சிகிச்சை பெற்று வருகிறார். தேவூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement