dinamalar telegram
Advertisement

வீழ்த்த இயலாது!

Share
Tamil News
வீழ்த்த இயலாது!

உத்தர பிரதேசத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்தும் திறன் எந்த கட்சிக்கும் இல்லை. ஜாதி மற்றும் மதத்தை வைத்து அரசியல் செய்யாமல், மாநில வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்காக பணியாற்றும் கட்சியால் தான் எங்களை எதிர்க்க இயலும்.

ஸ்வதந்திர தேவ் சிங்

உ.பி., மாநில தலைவர், பா.ஜ.,

பா.ஜ., அரசின் தோல்வி!

உத்தர பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு மற்றும் சுகாதார அமைப்பைப் போல், இங்குள்ள சாலைகளும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. சாலை விபத்துகளில் தொடர்ந்து உயிர் இழப்புகள் ஏற்படுவது வேதனை அளிக்கிறது. மாநில பா.ஜ., அரசின் தோல்வியை இது பிரதிபலிக்கிறது.

மாயாவதி

தலைவர், பகுஜன் சமாஜ்

இரண்டையும் எதிர்ப்பேன்!

நான் வெளிப்படையாக பேசுவதால், கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களிடம் இருந்தும், எனக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. எந்த அளவுக்கு முஸ்லிம் அடிப்படைவாதிகளை நான் எதிர்க்கிறேனோ, அதே அளவுக்கு ஹிந்து தீவிரவாதத்தையும் நான் எதிர்ப்பேன்.

ஜாவித் அக்தர்

பாலிவுட் பாடலாசிரியர்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement