dinamalar telegram
Advertisement

1.75 கிலோ எடை பச்சிளங் குழந்தைக்கு முதல் முறையாக இருதய அறுவை சிகிச்சை

Share
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில், 1.75 கிலோ எடை பச்சிளங் குழந்தைக்கு முதல் முறையாக இருதய அறுவை செய்யப்பட்டது.
சேலம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பொள்ளாச்சியை சேர்ந்த, 26 வயது கர்ப்பிணி கடந்த ஜூலை, 20ல், அறுவை சிகிச்சை மூலம், ஆண் குழந்தை பிரசவித்தார். 2.6 கிலோ எடையுள்ள, அக்குழந்தை அழவே இல்லை. ஆறாவது நாளில், குழந்தையின் இருதய துடிப்பு அதிகமானது. மேலும் இருதய செயல்திறனும், எடையளவு, 1.75 கிலோவாகவும் குறைந்து, கிருமி தொற்று ஏற்பட்டது. அதை மருந்துகள் மூலம், சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து, இருதய அறுவை சிகிச்சைத்துறை தலைவர் பொன்.ராஜராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினரின், தீவிர பரிசோதனைக்கு பின், அறுவை சிகிச்சை மூலம், குழந்தையின் இருதய கோளாறு சரி செய்யப்பட்டது. அதன்பின், பச்சிளங் குழந்தைகள் வார்டில் அனுமதித்து, தீவிர கண்காணிப்பு காரணமாக, தற்போது குழந்தை நல்ல முறையில் தாயிடம் பால் குடித்து, எடை கூடி வருகிறது. மருத்துவமனையில், 1.75 கிலோ எடையுள்ள பச்சிளங் குழந்தைக்கு, இருதய அறுவை சிகிச்சை செய்தது இதுவே முதல் முறை. தனியார் மருத்துவமனையில், இதற்கு ஐந்து லட்சம் ரூபாய் செலவாகி இருக்கும். சேலம் அரசு மருத்துவமனையில், இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என, டீன் வள்ளி தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement