dinamalar telegram
Advertisement

டி.எஸ்.பி.,க்கு பிடிவாரன்ட்

Share
சேலம்: சாட்சிக்கு ஆஜராகாத டி.எஸ்.பி.,க்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேட்டூர் டி.எஸ்.பி.,யாக இருந்தவர் சவுந்திரராஜன், கடந்த, 2018ல், வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தார். இவ்வழக்கு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில், விசாரணை அதிகாரியான சவுந்திரராஜனுக்கு பல முறை சம்மன் அனுப்பியும், சாட்சிக்கு ஆஜராகவில்லை. நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராகாததால், பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார். தற்போது சவுந்திரராஜன், தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement