dinamalar telegram
Advertisement

மூவரை சிறையில் அடைக்க உத்தரவு

Share
ஆத்தூர்: பொது சொத்துக்கு சேதம் செய்த வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த மூவர், நேற்று சரணடைந்தபோது, சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆத்தூர், நரசிங்கபுரம் புது உடையம்பட்டியை சேர்ந்தவர்கள் குமார், 37, மணிகண்டன், 23, கார்த்திக், 26. இவர்கள் மீது கடந்த, 2018ல், பொது சொத்து சேதம் உள்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் மூவரும், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் கடந்த ஏப்., 27ல், பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆறு மாதத்துக்கு பின், நேற்று மூவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை வரும், 28 வரை சிறையில் அடைக்கும்படி நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement