dinamalar telegram
Advertisement

தாலுகா அலுவலகம் முற்றுகை

Share
வாழப்பாடி: வாழப்பாடி அருகே, குமாரபாளையம் கிராமத்தில், 15 ஆண்டுகளாக மாரியம்மன், மதுரை வீரன் கோவில் திருவிழா இரு தரப்பு பிரச்னையால் நடைபெறவில்லை. இதனால், ஆவேசமடைந்த கிராம மக்கள், நேற்று தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாமி ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த குமார பாளையம் கிராமத்தில் மாரியம்மன், மதுரை வீரன் கோவில் உள்ளிட்ட கிராம காவல் தெய்வங்களுக்கு, ஊரணி பொங்கல் வைத்து சுவாமி ஊர்வலம், திருவிழா நடத்துவதற்கு, ஊர் பெரியதனக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த கிராமத்தில், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் பகுதியில் அடைக்கப்பட்டுள்ள பாதையை மீட்டு கொடுத்த பிறகுதான், கிராமத்தில் திருவிழா நடத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மற்றொரு தரப்பினர் கோவில் திருவிழா நடத்த வேண்டும் என்று, நேற்று வாழப்பாடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆண், பெண் என இருபாலரும் தாலுகா அலுவலகம் முன் சாமியாடி கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுமுக தீர்வுகாண, வாழப்பாடி தாசில்தார் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், ஒரு மாதத்திற்குள் வழித்தட பிரச்னைக்கு, சம்மந்தப்பட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பாதை பிரச்னை முடிவுக்கு வந்தாலும், வராவிட்டாலும் ஒரு மாதத்திற்கு பிறகு கோவில் திருவிழாவை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement