dinamalar telegram
Advertisement

ரேஷன் விற்பனையாளர்களுக்கு பயிற்சி; முதல்கட்டமாக 115 பேர் பயன்

Share
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ரேஷன் கடை பணியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. கலெக்டர் கார்மேகம் பயிற்சியை துவக்கி வைத்து பேசியதாவது: மாவட்டத்தில், 1,156 முழு நேர ரேஷன்கடை, 437 பகுதி நேரம் என மொத்தம், 1,593 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. 1,107 விற்பனையாளர்கள் பணியாற்றுகின்றனர். பொது வினியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, ரேஷன்கடைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். நுகர்வோருக்கு தெரியும்படி, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அவர்களுடன், நட்புரிமையுடன் பழகி, மரியாதையாகவும், கனிவாகவும் நடந்து கொள்ள வேண்டும். பொருட்களை, சரியான எடையளவில் வழங்குதல், மின்னணு விற்பனைமுனைய கருவி, பயோமெட்ரிக் கருவியை, முறையாக பயன்படுத்த பயிற்சி அளிக்கப் படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். நாச்சியப்பா கூட்டுறவு மேலாண் நிலையத்தில், ஐந்து கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் கட்டமாக,நேற்று, 115 விற்பனையாளர்கள் பயன்பெற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement