dinamalar telegram
Advertisement

சாலையில் கிடந்த ரூ.1 லட்சம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

Share
சேலம்: சேலம், நெத்திமேட்டை சேர்ந்தவர் தினேஷ்குமார், 27. இவர் நேற்று மதியம், வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் எடுத்துள்ளார். அதை பையில் வைத்து தன் பைக்கில் சைடில் தொங்கவிட்டபடி, கன்னங்குறிச்சியில் இருந்து ஐந்து ரோடு சென்று பின்னர், கொண்டலாம்பட்டி பைபாஸ் வழியாக, மாலை, 3:10 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். அதே நேரத்தில் பணத்துடன் கூடிய பை, கொண்டலாம்பட்டி சவுடேஸ்வரி கல்லூரி எதிரில் உள்ள சாலையில் கிடந்தது. இதை கண்ட நிலவாரப்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் ரகுமான், 40, நெத்திமேட்டை சேர்ந்த சதீஷ்குமார், 40, ஆகியோர் பையை எடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த கொண்டலாம்பட்டி எஸ்.ஐ., அன்புவிடம் ஒப்படைத்தனர். அவர் பையை திறந்து பார்த்த போது அதில், ஒரு லட்சம் ரூபாய் இருந்தது தெரிய வந்தது. அப்போது பணப்பையை தேடி, தினேஷ்குமார் வந்தார். அவர் தனது பணம் என்பதற்கான ஆவணங்களை காண்பித்தார். இதையடுத்து, கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து போலீசார் முன்னிலையில், தினேஷ்குமாரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. அப்துல் ரகுமான், சதீஷ்குமாரை போலீசார் பாராட்டினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement