dinamalar telegram
Advertisement

உரம் கண்காணிப்பு பிரிவு துவக்கம்

Share
சேலம்: சேலம், கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில், உரம் வரத்து, விற்பனை மற்றும் இருப்பு சம்பந்தமாக கண்காணிக்க, 'உரம் கண்காணிப்பு செல்' தொடங்கப்பட்டுள்ளது. காலை, 9:00 மணி முதல், இரவு, 7:00 மணிவரை செயல்படும். அனைத்து வகையான உரங்கள் வினியோகம், விற்பனை போன்றவற்றில் பிரச்னைகள் இருப்பின், விவசாயிகள் நேரில் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்து நிவர்த்தி பெறலாம். இணை இயக்குனர் அலுவலகம், 0427-2451050, 94426-16609, தகவல் மற்றும் தர கட்டுப்பாடு உதவி இயக்குனர்- 94875-31085 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தவிர, அந்தந்த வட்டார உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில், மொபைல் போனில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement